தக்கலையில்: மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்ட நிமிர் குழு
தக்கலை அருகே 12 ஆண்டுகளாக சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட முதியவரை குமரி மாவட்ட போலீஸ் நிமிர் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். முதல் கட்ட பராமரிப்புகளை செய்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் மேல்பாலை காருண்யா மனநல மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். மாவட்ட போலீஸ்...
குமரியில்: நூதன முறையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு
தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நவதானியங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவைகளைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் தேர்தல் பார்வையாளர் சுபாஸ்ரீநந்தா ஆகியோர்...
குளச்சல்: முதியவர் சாவு – போலீசார் விசாரணை
குளச்சல் பகுதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்த முதியவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கால் புண் காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று (ஏப்ரல் 17) அவர் உயிரிழந்தார். குளச்சல் போலீசார் அவரது உடலை மீட்டு பிணவறையில் வைத்துள்ளனர்....
களிக்காவிளை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை
மடிச்சல் பகுதியைச் சேர்ந்த சத்தியதாஸ் (57) என்ற விவசாயி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று சந்தவிளையில் உள்ள அவரது தென்னந்தோப்பில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் கண்டறிந்தனர். அவர் அருகே விஷ பாட்டில் கிடந்ததால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்...
குமரியில்: ஏவிஎம் கால்வாய் சீரமைப்பு: காங். எம்எல்ஏ வாக்குறுதி
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், கடந்த 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவிஎம் கால்வாயை முழுமையாக சீரமைக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தடையில்லா சான்று...
குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும், மே மாதம் 4ஆம் தேதியும் என மொத்தம்...
நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை பொன்னேரி, சோளிங்கர், துறையூர் தொகுதிகளிலும், 20-ஆம் தேதி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம்,...
பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் திமுகவினர் தங்கள்...
மார்த்தாண்டம்: ஆயரை சந்தித்த பா. ஜ வேட்பாளர் விஜயதரணி
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் விஜயதரணிக்கு ஆதரவாக பாரதிய ஜனதா, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோசை விஜயதரணி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து மஞ்சாலுமூடு பகுதியில்...
குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்; தந்தை மீது வழக்கு குமரியில்
குளச்சல் போலீசார் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர காத்திருப்பதாக தெரிவித்தனர். இதில், பைக் ஓட்டி வந்த...













