நேற்று மஞ்சாலுமூடு பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அஜின் கில்பர்ட் (45) என்பவரை, அவருக்கு முன்னால் சென்ற இருவர் பைக்கில் வழிமறித்து, காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். காயமடைந்த அஜின் கில்பர்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















