குமரி: சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேரளா எல்லையை ஒட்டி உள்ளதால் களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா போன்ற எல்லைப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களுடன் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இரவு தொடங்கிய சோதனையைத் தொடர்ந்து, சொகுசு கார்கள், அரசு மற்றும்...

குலசேகரம்: யோகா விழிப்புணர்வு ; 100 நாட்கள் பயிற்சி முகாம்

வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் 100 நாட்கள் யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி சேர்மன் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி இந்த பயிற்சியை...

குமரியில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் விளைவாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாகனங்களில் இடம்பெற்றிருந்த அரசின் சாதனைகள் குறித்த விளம்பரங்கள் ஊழியர்களால் பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால்...

குமரி: ஆஸ்திரேலிய தூதருடன் விஜய்வசந்த் எம்பி சந்திப்பு

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, நேற்று (15-03-2026) கன்னியாகுமரி வருகை தந்த தென் இந்தியாவிற்கான சென்னை ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தின் தூதர் சிலாய் ஷாகி மற்றும் துணைத் தூதரக அதிகாரி கத்ரீனா நாப் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த...

குமரி: ஆம்னி பஸ் பைக் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தென்கரை, உடுப்பி ரெஸ்டாரன்ட் பகுதியில் இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு பஸ் வள்ளி ஆற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. மாவட்ட கலெக்டர் மற்றும்...

குழித்துறை: தவெக வுக்கு பாஜ அழுத்தம் கொடுக்கவில்லை

குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதே இதன் நோக்கம் என்றும், வரும் தேர்தலில் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி...

கிள்ளியூர்: ரூ 4. 74 கோடியில் சாலைகள்- எம். எல். ஏ தொடங்கினார்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம், மெதுகும்மல், நடைக்காவு, வாவறை, முஞ்சிறை, சூழால், அடைக்காகுழி, தூத்தூர் பைங்குளம் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த 24 சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ. 4 கோடியே 74 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ...

நாகர்கோவில் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 335 கோடியே 3 லட்சம் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் மூலதனச் செலவாக ரூ. 282 கோடியே 59 லட்சமும், குடிநீர் மற்றும் வடிகால் நிதிச்...

குமரி: ஜன் அவுஷதி தினம் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் மக்கள் மருந்தகத்தில் ஜன் அவுஷதி தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார், மக்கள் மருந்தகம் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து, தரமான உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில்...

காட்டாத்துறை: குளத்தில் மிதந்த தொழிலாளி சடலம்

காட்டாத்துறை பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்த திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெயசீலன் (48), அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது தடுமாறி விழுந்து உயிரிழந்தார். நேற்று அப்பகுதி மக்கள் குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்டு திருவட்டார் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை...