கொல்லங்கோடு: பள்ளி மாணவன் கடலில் மாயம்
கேரளாவின் பூவார் பொழி முகத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் டேனியல் கிறிஸ்டியன் திடீரென கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானான். நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், நண்பர்களால் மாணவனை காப்பாற்ற முடியவில்லை. பூவார் தீயணைப்பு படை வீரர்கள் நேற்று இரவு வரை தேடியும்...
வாரிசுகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து மறைந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாரிசுகள் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் கருணை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். மேலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தாமதம்...
நித்திரவிளை: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வைகல்லூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான சோமன், வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகனுக்கு திருமணம் பார்ப்பது குறித்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மன உளைச்சலுக்கு ஆளான அவர், அன்று இரவு விஷம் குடித்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
குமரி: விஷ ஜந்துக்களின் கூடாரமாமான போலீஸ் குடியிருப்பு
திருவட்டாறு அருகே காங்கரை, இடிச்சக்கபிலாமூடு பகுதியில் இருந்த பழைய போலீஸ் குடியிருப்பு மூடப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டாறில் புதிய குடியிருப்பு கட்டப்பட்டது. தற்போது காங்கரை குடியிருப்பு பாழடைந்து விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பாழடைந்த போலீஸ் குடியிருப்பு கட்டிடத்தை...
குமரி: பத்திர பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த மெர்லின் ரஞ்சித் (40) என்பவர், சொத்துப் பாகப்பிரிவினைக்காக மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி, நேற்று அவர் தனது குடும்பத்துடன் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தின் வாயிற்படியில் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரி உணவு உண்ணச் செல்ல முயன்றபோது அவரைத் தடுத்து...
தெருவுக்கடை: டாஸ்மாக் கடையை அகற்ற இரவிலும் போராட்டம்
தெருவுக்கடை பகுதியில் தேவாலயங்கள், கோயில், பள்ளி மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவிலும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் கூறப்படுகிறது. நிரந்தரமாக இந்த டாஸ்மாக் கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாக இந்த...
குமரி: பள்ளி திறப்பை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளியூர் திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக இந்த...
பேச்சிப்பாறை: அணையை கலெக்டர், அமைச்சர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து இன்று (1-ம் தேதி) தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இந்த தண்ணீரை திறந்து வைத்தனர். பாசன கால்வாய் வழியாக வெளியேறிய தண்ணீரில் ஆட்சியர், அமைச்சர், விவசாயிகள் பூக்களையும் நெல்மணிகளையும்...
நாகர்கோவில்: குப்பை லாரிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை சேகரித்துச் செல்லும் வாகனங்களை மேயர் மேரி பிரின்சி லதா நேற்று நேரில் ஆய்வு செய்தார். சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், குப்பைகளை முறையாக மூடிப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் அவர்...
கடியப்பட்டணம்: தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
கடியப்பட்டணம் குழந்தை இயேசு காலனியில் வசிக்கும் மீனவர் சுரேன் என்பவரின் ஒரு வயது மகள் ஹெலைனா, நேற்று (மே 30) வீட்டில் குளியலறையில் தண்ணீர் நிரம்பிய வாளியில் தலைகீழாக விழுந்து தத்தளித்த நிலையில் காணப்பட்டார். தாயார் வின்சி அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு...












