கேசவபுரம்: ஆனபூந்திக்குளம் கோவில் பவுர்ணமி பூஜை

திருவட்டாறு அருகே உள்ள கேசவபுரம் ஆனபூந்திக்குளம் குளத்து பத்திரகாளியம்மன், பூதத்தான் இசக்கியம்மன், சுடலை மாடன், நாகராஜா கோவிலில் நேற்று வைகாசி பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் அபிஷேகம், புஷ்பாபிஷேகம், அலங்காரதீபாராதனை, நிவேத்யம் ஆகியவை நடந்தன. பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

குழித்துறை: மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் பலி

குழித்துறையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சுஷ்யந்த், விடுமுறையில் மாங்காய் பறிக்க மாமரத்தில் ஏறியபோது, மின்கம்பியில் கம்பு உரசியதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி: மீன் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இனயம்புத்தன் துறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டதை கண்டித்தும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலாளர் எஸ்கலின்...

குமரி மாவட்ட புதிய கலெக்டர் பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த அழகுமீனா, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்குப் பதிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதாப் வரும் திங்கள்கிழமை (ஜூன் 1) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர்...

தக்கலை: ரத்த தான முகாம் ; அமைச்சர் துவக்கி வைத்தார்

ஜூலை 14ஆம் தேதி உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் ராஜேஷ்குமார் இந்த முகாமை தொடங்கி வைத்தார். செல்லசாமி எம்.எல்.ஏ மற்றும்...

குழித்துறை நகராட்சி ஆணையரை மிரட்டிய பாஜ கவுன்சிலர் – வழக்கு

குழித்துறை நகராட்சி ஆணையராகப் பணியாற்றும் வெங்கடாசலம், கடந்த 27ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாஜக கவுன்சிலர் விஜூ, அவரை அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார், ஆணையரை மிரட்டியதாகக் கூறப்படும் கவுன்சிலர் மீது...

குமரி: அம்மன் கோவிலில் வெள்ளிக்கவசம் திருட்டு

மார்த்தாண்டம் தாணிமூடு இசக்கியம்மன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி பூஜைக்குப் பிறகு கோவில் ஆபரணங்கள் அறையில் பூட்டி வைக்கப்பட்டன. 27ஆம் தேதி மீண்டும் பூஜைக்காக பூசாரி சென்றபோது, அறைப் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு கிலோ வெள்ளி முக கவசம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பூசாரி நாகப்பன்...

நாகராஜா திருக்கோவிலில் உலா வந்த குட்டி ராஜநாகம்

நாகர்கோவிலில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் வளாகத்தில் நேற்று ஒரு குட்டி ராஜநாகம் உலா வந்தது. நாக வழிபாட்டிற்குச் சிறப்புப் பெற்ற இந்த ஆலயத்தில், சிறிய ராஜநாகம் ஊர்ந்து சென்றதைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியத்துடனும் பக்தி பரவசத்துடனும் பார்த்தனர். இந்த அபூர்வ நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே...

குமரி: மாதா குருசடி உடைப்பு; உண்டியல் மாயம்

திருவட்டாறு பகுதி கல்லறவிளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோயிலில், மாதா சுரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு, சுரூபத்தின் கீழ் இருந்த இரும்பு உண்டியல் திருடப்பட்டுள்ளது. நேற்று காலை பொதுமக்கள் இதை கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஆலய பங்கு பேரவை துணைத் தலைவர் ஜெரின் திருவட்டாறு போலீஸ்...

தளியல்: ஸ்ரீ ஜடாதீஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம்

திருவட்டாறு தளியல் தெரு ஸ்ரீஜடாதீஷ்வரர் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம், கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இன்று வைகாசி விசாக காவடி யாத்திரையும், வரும் 30 ஆம்...