கொல்லங்கோடு: கோயிலில் விடிய விடிய தூக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில் நடைபெறும் பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று அதிகாலை தொடங்கி இன்று (மார்ச் 23) காலை நிறைவடைந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த 1124 குழந்தைகளுடன், அம்மன் 26 என மொத்தம் 1150 குழந்தைகள் நேர்ச்சையில் பங்கேற்றனர். தமிழகம்...
குமரி: தேர்தல் கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரிகள்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அழகுமீனா மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை...
குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் பூங்கோதை தீவிர ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில்...
திருவட்டாறு: கோயில் கருவறைக்குள் விழுந்த சூரிய ஒளி
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி மாதத்தில் 3 முதல் 6-ம் தேதி வரை மாலை வேளையில் சூரிய ஒளி கருவறை வரை பாய்ந்து, உற்சவர் மற்றும் சயனகோலத்தில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியை தழுவிச்செல்லும் அதிசயம் நிகழ்கிறது. நேற்று (மார்ச் 19) மாலை இந்த அற்புதக்...
குமரி: நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ. 10 கோடி மோசடி
குமரி - கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கோகுல், கெளதம் என்ற பெயர்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களின் உரிமையாளர் ஜெய்சேகர், சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும்...
புதுக்கடை: பாறை உடைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
புதுக்கடை போலீஸ் ஆய்வாளர் மாடசாமி தலைமையில், தேங்காப்பட்டணம் பகுதியில் அரசு அனுமதி இன்றி கல்குவாரியிலிருந்து பாறைகளை உடைத்து டெம்போக்கள் மூலம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது, கருங்கற்களை உடைத்து டெம்போக்களில் ஏற்றி கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் மற்றும்...
நாகர்கோவில்: ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும்...
நாகர்கோவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு நேற்று (மார்ச் 18) 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம், அறைகள், வாகனங்கள், குற்றவாளி கூண்டு மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பெரும்...
குமரி: கல்லூரி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்
குமரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியின் 10 மாணவிகள் கொண்ட குழுவினர் தக்கலை பேருந்து நிலையத்தில் நேற்று சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா இந்த ஓவியப் பணியைத் தொடங்கி வைத்தார். ஓவியக்...
தக்கலை: போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் கருதி, கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தர்பூசணி மற்றும் ஜூஸ் நேற்று முதல் வழங்கப்படுகிறது. தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில், பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மேற்பார்வையில், தக்கலை பேருந்து...












