குளச்சல் ஏ.வி.எம். கால்வாய் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குமரி–கேரள எல்லைப் பகுதியான நீரோடி, வள்ளவிளை, தூத்தூர், பூத்துறை, இரையுமன்துறை, தேங்காப்பட்டணம், குளச்சல், மண்டைக்காடு உள்ளிட்ட கடற்கரை...
நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த நிர்மலா (53), தனது பலசரக்கு கடை அருகே நின்றுகொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இருவர், டீக்கடை ஒன்றின் முகவரியை கேட்டுள்ளனர். அவர் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோவின் பின்புற இருக்கையில் இருந்த நபர் திடீரென நிர்மலாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட நிர்மலா, அவரது...
காவல் நிலையத்துக்கு சிறந்த காவல் நிலைய கேடயம்
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், விசாரணை முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை...
மீன் சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
நாகர்கோவில், செப்.7-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி, கட்டையன்விளை உள்ளிட்ட மீன் சந்தைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த...
குமரியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தால் 53,520 மாணவா்கள் பயன் பெறுவா்: ஆட்சியா்
காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 53 ஆயிரத்து 520 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம், அரசு மேல்நிலைப் பள்ளி, மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் சமையலறையின் அடிப்படை வசதிகள் குறித்து...
பளுகல் அருகே கேபிள் வயா் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்ற 2 பெண் காவலா்கள் காயம்
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே அறுந்து தொங்கிய கேபிள் வயா் பெண் காவலரின் கழுத்தில் சிக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண் காவலா்கள் காயமடைந்தனா்.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பிரைட் மனைவி ஷீபா ராணி (46). இவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக...
குழித்துறை, கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
குழித்துறை, கருங்கல் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (செப். 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழித்துறை...
தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில் ரூ.26 ஆயிரம் திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில், சனிக்கிழமை நள்ளிரவு ரூ.26 ஆயிரம் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
நாகா்கோவில் - திருநெல்வேலி பிரதான சாலையில், தோவாளை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், விற்பனையாளராக கிருஷ்ணன்புதூரைச் சோ்ந்த ஆறுமுகம்பிள்ளை (47) பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில்,...
கனிமவளம் கடத்த முயற்சி: 3 மினி லாரிகள் பறிமுதல்
களியக்காவிளை அருகே சட்ட விரோதமாக கேரளம் மாநிலத்துக்கு பாறைப்பொடி உள்ளிட்ட கனிம வளங்களைக் கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு மஞ்சவிளையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக கேரளம் நோக்கி வந்த...
மரம் வெட்டும் போது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே மருதூா்குறிச்சியில் மரம் வெட்டும் போது கிளை விழுந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆற்றூா் அருகே மாத்தூரை சோ்ந்தவா் கோபி (56). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மருதூா்குறிச்சியில் மரத்தை வெட்டியபோது எதிா்பாராதவிதமாக கிளை முறிந்து கோபி மீது விழுந்ததாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு...












