எஸ்பி மாற்றம் உற்சாகத்தில் கனிமவள மாபியா கும்பல்..!!?
குமரி வழியாக கேரளாவிற்கு கனிம வள லாரிகள் படை எடுக்குது. எஸ்பி ஸ்டாலின் மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குமரி வழியாக கேரளாவுக்கு ரகசியமாக கனிம வளங்கள் செல்கிறதாம்.
இரவு சோதனை சாவடி வழியாக டாரஸ் லாரிகள் சென்று வருகின்றன. சில சோதனை சாவடிகளில் போலீசார் அந்த...
கன்னியாகுமரி லாட்ஜில் பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை- தலைமறைவான கொலையாளி கோவையில் கைது.
கொலையுண்ட பெண் நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன் புதூர்,ஆத்தி காட்டுவிளையை சேர்ந்த செல்வி(50) என்பது தெரிய வந்துள்ளது மேலும் லாட்ஜிக்கு பெண்ணை அழைத்து வந்த வாலிபர் தான், தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்துள்ளது, இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது-இதில்...
நாகர்கோவில்: சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
உணவகத்தால் சுகாதார சீர்கேடு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவகச் சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வழிந்தோடி கடுமையான சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் தகவல் பரவியது.
ரூ.10 ஆயிரம்...
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் தொடக்கம்
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்துப் பேசினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிகல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, உயா்கல்வி பயில உள்ள மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நாகா்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில்...
குழப்பவாதிகளான கம்யூனிஸ்ட்கள்! நாளொரு கூட்டணி.. பொழுதொரு நிலைப்பாடு! சரமாரியாக விமர்சித்த காங்.,
கன்னியாகுமரி: 2 தொகுதி இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கம்யூனிஸ்டுகளுக்குத் தான் பின்னடைவு எனவும், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்தார்கள், அதற்குப் பிறகு இன்னொரு கூட்டணிக்கு வந்தார்கள்.. அந்தக் கூட்டணியிலும் நிலையாக இல்லாமல் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் அவர்களின் நிலைப்பாடே சரியாக இல்லை என்று தான்...
கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! புதிய எஸ்பியாக அன்சுல் நாகர் நியமனம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் ஐபிஎஸ் இருந்த நிலையில், அவருக்கு பதிலாக திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த அன்சுல் நாகர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு புதிய பணியிடம் எதுவும் ஒதுக்கப்படாத நிலையில், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் எப்போதுமே ஆட்சி...
நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அமைச்சா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம், காப்புக்காட்டில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், ஆட்சியா் மு. பிரதாப் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கிள்ளியூா் பேரவைத் தொகுதி மக்களின் நீண்ட...
ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க குளச்சல் எம்எல்ஏ கோரிக்கை
ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலவா் ச. விஜய்க்கு, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனு விவரம்:
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 50 கிலோ மூட்டையாக அரிசி...
விநாயகா் சிலை ஊா்வலம்: அதிகாரிகளுடனான ஆட்சியா் கலந்தாய்வுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட த்தில் விநாயகா் சிலை அமைப்பது, வாகனங்களில் கொண்டு சென்று கரைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சொத்தவிளை,...
இளைஞா்களை விளையாட்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்
விளையாட்டுதான் இளைஞா்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்...












