மார்த்தாண்டம்: சாலைகளை சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகள் படுமோசமாக காணப்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பதுங்கிவிட்டாலுமூடு, குழித்துறை, தக்கலை போன்ற பகுதிகளில் மரணக்குழிகளாக காணப்படுகிறது.
படுமோசமான இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா சார்பில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நேற்று...
கொல்லங்கோடு: அரசு ஊழியர், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
கிள்ளியூர், வள்ளவிளை அருகே இடப்பாடு கடற்கரை பகுதியில் தனிப்படை போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் உட்கார்ந்து இருப்பதை தனிப்படை எஸ்ஐ கண்டு, அருகே சென்று பார்த்தபோது 7 பேர் தலா ஐந்து கிராம் கஞ்சாவை கையில் வைத்துக்கொண்டு புகைத்துக்கொண்டு இருந்ததை கண்டனர்....
கொற்றிக்கோடு: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்
தக்கலை அருகே கொற்றிக்கோடு பகுதி சரல்விளையை சேர்ந்தவர் ஜெகன் ரத்தினராஜ். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவரது மகள் ஜென்சி (22) மற்றும் மகன் பாட்டியுடன் வசித்து வருகின்றனர். ஜென்சி நகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ....
குமரி: போதை பொருள் விற்பனை குறித்த தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் தக்கலை மது விலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பும்படி குமரி ஆட்சியர் அலுவலக நுழைவாயில், பள்ளி கல்லூரி, கடற்கரை மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும்...
நாகர்கோவில் இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் அரங்கில் வைத்து இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமிர்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் அலோசியஸ் மணி தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் முத்துக்குமார் முன்னிலையில் ராணி செல்வின் கருத்துரை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக...
நாகர்கோவில் கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். மாணவர்கள் கிறிஸ்து பிறப்பை மாணவ மாணவியர்கள் தத்துவரூபமாக செய்து காண்பித்தனர். கிறிஸ்மஸ் தாத்தா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை...
இரணியல்: நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
இரணியல் அருகே ஆலன்விளை தேவாலயம் அருகே குழித்துறை மறைமாவட்டத்திற்குட்பட்ட தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் பணம் டெபாசிட் செய்திருந்தனர். கடந்த ஆண்டிலிருந்து டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அப்பகுதியினர் இரணியல் போலீசில்...
தலக்குளம்: குளங்களில் மீன் வளர்ப்பு
குமரி மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையின் மூலம் தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிபெருமாள் குளத்தில் உள்நாட்டு கெண்டை மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணி நேற்று 15ஆம் தேதி நடந்தது. பத்மநாபபுரம் உதவி கலெக்டர் வினய்குமார் மீனா தொடங்கி வைத்தார். தொடர்ந்து தலகுளம் மற்றும் காக்கோட்டு தலை...
மண்டைக்காடு: கோயில் அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும், கோயிலை தினமும் சுத்தம் செய்து அம்மன் புனிதத்தை காக்க வழி செய்தல் வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில்...
குறும்பனை: புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரிமாவட்ட கமிட்டி சார்பாக புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா குறும்பனை, பாரியக்கல் கடற்கரை பகுதியில் நேற்று (15-ம் தேதி). நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மிடாலக்காடு கிளை தலைவர் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணை...












