இனயம்: 4 மீன்பிடி வள்ளங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து

0
59

புதுக்கடை அருகே இனயம் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி அடிமை (48). மீன்பிடி தொழிலாளி. இவரும் இவருடன் சேர்ந்த 4 பேரின் மீன்பிடி வள்ளங்களையும், மீன்பிடி உபகரணங்களையும் கடற்கரையில் நிறுத்தி இருந்தனர். இதில் 3 வள்ளங்கள் பதிவு பெற்றதாகும். சம்பவ தினம் 4 வள்ளங்களும், உபகரணங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அந்தோணி முத்து புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here