குமாரகோவில்: திருமண மண்டப கால் நாட்டு விழா

0
65

தக்கலை அருகே குமாரகோவில், குமாரசாமி திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் முன்பு ரூபாய் 3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருக்கோயிலில் கால் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், ஜோதிஷ்குமார், இணை ஆணையாளர் பழனிகுமார் உட்பட அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here