கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் நகரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரபா (48) மற்றும் லாசர்(63) ஆகியோர் பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் பிரபா, லாசர் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.