Google search engine

குமரி கடலோர பகுதியில் 256 மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு

கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்கு கீழ் மொத்தம் 46 மின்விநியோக பிரிவு அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் மின்மாற்றிகள் வருகிறது. மின்மாற்றிகளை பராமரிக்க தமிழக அரசு மற்றும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு கடந்த 19ம்...

குமரி -பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த எஸ். பி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இதில் தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பையா, பெண்கள் மற்றும்...

திருவட்டாறு அருகே வாலிபர்  தூக்கிட்டு  தற்கொலை

திருவட்டார் ஆற்றூர் பகுதியை  சேர்ந்தவர் மனோகரன் மகன் ஜெனிஸ் (26) கொத்தனார். ஜெனிஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெனிஷுக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.   சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானம்...

கன்னியாகுமரியில் தூய்மை பணி பேரணி.

தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக, காந்தி மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்கரை வரை தூய்மை பணி பேரணி நடைபெற்றது. இதில் புள்ளியியல் அலுவலகத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில்...

கட்டுமான பணியின் போது தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு

திருவட்டாறு அடுத்த வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் பால்சன் (56)கொத்தனார். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.   மகள்களுக்கு   திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் பால்சன் நேற்று ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்து வரும் கட்டிட கட்டுமான...

விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள் இணை இயக்குனர் தகவல்

வேளாண்மை இணை இயக்குனர் மட்டும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை திட்ட இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாவட்டத்திற்குள்...

தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் கல்வி கடன் ஒப்பந்தம்

சுங்கான் கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இக்கல்லூரியில் பொறியியல் கல்வி படிக்கும் மாணவ மாணவர்கள் அந்தந்த வங்கி கிளையில் எளிதாக...

வில்லுக்குறியில் இயற்கை விவசாய கருத்தரங்கு

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம்  வில்லுக்குறி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்  ( விவசாயம்)  ஜென்கின் பிரபாகர் தலைமை வகித்தார். வில்லுக்குறி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி வாழ்த்துரையாற்றினார். வாணி, வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம்...

மணவாளக்குறிச்சியில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று சுங்கான்கடை, தோட்டியோடு ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். ஆளூர் வீராணி ரயில்வே...

மகனைக் கொன்ற தந்தை போலீசில் சரண்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜினு 36, ஜிஜின் 34, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் இவர்களில் மூத்த மகன் ஜினு பட்டப்படிப்பை முடித்து கேரளாவில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்...