மணவாளக்குறிச்சியில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

0
62

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று சுங்கான்கடை, தோட்டியோடு ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். ஆளூர் வீராணி ரயில்வே பகுதியில் செல்லும்போது அங்கு ரயில் மூலம்  கேரளாவுக்கு கொண்டு செல்ல சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 200 கிலோ அரிசி மூடைகள் தண்டவாளம் பகுதியில் பதுக்கி வைக்கப்ட்டிருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அவற்றுகளை மீட்டு உடையார்விளை அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். இன்று அதிகாலை மணவாளக்குறிச்சி பெரியவிளையில் ரோந்து செல்லும்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு சொகுசு கார் வந்துகொண்டிருந்தது. உடனே அவர்கள் காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது. உடனே அதிகாரிகள் பின் தொடர்ந்து காரை துரத்தி சென்றனர். சுமார் 5 கி. மீ. தூரம்வரை துரத்தி சென்று மண்டைக்காடு புதூரில் மடக்கி பிடித்தனர். உடனே கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். பின்னர் அதிகாரிகள் காரை சோதனை செய்ததில், காருக்குள் 13 பிளாஸ்டிக் மூடைகளில் சுமார் 650 கிலோ அரிசி இருந்தது. உடனே காருடன் அரிசி மூடைகளை மீட்டு உடையார்விளை குடோனில் ஓப்படைத்தனர். கார் கல்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.