குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜினு 36, ஜிஜின் 34, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் இவர்களில் மூத்த மகன் ஜினு பட்டப்படிப்பை முடித்து கேரளாவில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார் ஜினு-வுக்கு திருமண வரன்கள் பார்க்க துவங்கி உள்ளனர் ஆனால் வரன்கள் ஏதும் கைகூடாமல் போனதால் விரக்தியடைந்த ஜினு அதனை மறக்க மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார் நாளடைவில் மதுவிற்கு அடிமையான ஜினு வேலைக்கு செல்வதை முழுமையாக நிறுத்திவிட்டு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் இதனை செல்வராஜ் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் வந்த ஜினுவை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து செல்வராஜ் கதவை பூட்டி வைத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ஜினு கதவை உடைத்து திறக்க முயன்றபோது கதவை திறந்து வெளியே வந்த செல்வராஜை ஜினு சைக்கிள் செயினை கொண்டு தாக்க முயன்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் கிடந்த தேங்காய் தொலிக்கும் கம்பியை கொண்டு தலையில் ஓங்கி அடித்துள்ளார் இதில் படுகாயமடைந்த ஜினு சுருண்டு கீழே விழுந்து துடிதுடிக்க இறந்துள்ளார். இதை அடுத்து தந்தை காவல் நிலையத்தில் சரவணன் அடைந்தார்,
Latest article
நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறிய...
கன்னியாகுமரி: மளிகை கடைக்காரரிடம் ரூ. 2 லட்சம் மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 44). இவர் கோட்டார் பஜாரில் பலசரக்கு மற்றும் கால்நடைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்....
மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021 ஜூன் 2ஆம் தேதி கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவிலில் நான்கு வருடங்களாக பணிகள் நடந்து, மரத்திலான...