திருவட்டாறு அருகே வாலிபர்  தூக்கிட்டு  தற்கொலை

0
76

திருவட்டார் ஆற்றூர் பகுதியை  சேர்ந்தவர் மனோகரன் மகன் ஜெனிஸ் (26) கொத்தனார். ஜெனிஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெனிஷுக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.   சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானம் இல்லாததால் ஜெனிஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஜினி கடந்த 30 ஆம் தேதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மதியம் ஜினி மீண்டும் கணவர்  ஜெனிஷ்  வீட்டுக்கு வந்தார். மனைவி கதவை தட்டியும்  ஜெனிஷ்  கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஜினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் வேட்டியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் ஜெனிஷ் சடலமாக காணப்பட்டார். இது குறித்து தகவல் பேரில் திருவட்டார் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.