Google search engine

மண்டைக்காடு:   குண்டு வீச்சு வழக்கு 2 பேர் கைது

மண்டைக்காடு அடுத்த கருமன்கூடல் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (57). கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அதிகாலை பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு வளாகத்தில் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது.    ...

நித்திரவிளை: விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் மரணம்

நித்திரவிளை அருகே தெருவு முக்கு பகுதியை சேர்ந்தவர் மாதவன்பிள்ளை மகன் மனு (27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தூத்தூரை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (4-ம் தேதி)  ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது...

நாகர்கோவிலில் 8 ஆட்டோக்கள் அடித்து உடைத்து சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் ஏராளமான ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இரவு நேரங்களிலும் அங்கு ஆட்டோக்கள் நிற்கும். நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் சுமார் 10 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. நேற்று காலையில் ஆட்டோ டிரைவர்கள் அங்கு வந்தபோது, 8 ஆட்டோக்களை மர்மநபர்கள்...

கொல்லங்கோடு: கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் நேற்று (6-ம் தேதி)  இரவு மேடவிளாகம் மகளிர் மீனவர் கூட்டுறவு சங்க கட்டிடம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு வாலிபர்கள் நின்றனர். போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம்...

கருங்கல்: குமரி மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம்

குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் கருங்கலில் நேற்று ( 4-ம் தேதி)  நடைபெற்றது.    கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட திமுக செயலா் த. மனோதங்கராஜ் எம். எல். ஏ. தலைமை வகித்தாா். துணை செயலா்கள் பாபு, டேவிட் ராஜபோஸ், அப்புக்குட்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு...

நாகர்கோவிலில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் உத்தர வின்பேரில் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் தீவிபத்துகளை எப்படி தடுப்பது? பேரிடர் காலங்களில் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது? பிறரை...

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கோட்டயத்திற்கும், குமரியில் இருந்து புனலூருக்கும் ரயில் சென்று வருகிறது. இந்த 2 ரயில்களும் டவுன் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே...

கிள்ளியூர்: பாசன கால்வாய் சீரமைப்பு; எம்எல்ஏ தொடக்கி வைப்பு

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட சிற்றார் பட்டணங்கால் கிளை கால்வாய்கள் பல பகுதிகளில் தூர்வாரப்படாமல் பழுதடைந்து  காணப்பட்டது. இந்த கால்வாய்களின் கரைகள்  மற்றும் பக்க சுவர்களை சீரமைக்கவும் மதகுகளை நவீன முறையில் சீரமைத்து விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கிள்ளியூர் எம் எல் ஏ...

குழித்துறை: செக் மோசடி வழக்கு; வாலிபருக்கு 1 ஆண்டு சிறை

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூரியன் என்பவர் மகன் ஷாஜி (47) இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் மகன் ஜஸ்டின் (46). இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் ஜஸ்டின் தனது நண்பர் ஷாஜியிடமிருந்து ரூ 4. 5 லட்சம் கடனாக...

கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை மற்றும் கடமலைக்குன்று வட்டார பேரவை இணைந்து நடத்திய போதை விழிப்புணவு பேரணி பிலாங்காலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்திலிருந்து துவங்கி பூந்தோப்பு சி. எஸ். ஐ ஆலயம் வரை நடைபெற்றது.   பேரணிக்கு பேரவை தலைவர். மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட்...