கிள்ளியூர்: பாசன கால்வாய் சீரமைப்பு; எம்எல்ஏ தொடக்கி வைப்பு

0
320

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட சிற்றார் பட்டணங்கால் கிளை கால்வாய்கள் பல பகுதிகளில் தூர்வாரப்படாமல் பழுதடைந்து  காணப்பட்டது. இந்த கால்வாய்களின் கரைகள்  மற்றும் பக்க சுவர்களை சீரமைக்கவும் மதகுகளை நவீன முறையில் சீரமைத்து விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் தற்போது முதல் கட்டமாக கால்வாய்களை சீரமைக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ 6. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த கால்களை சீரமைக்கும் பணிகளை திப்பிரப்மலை பகுதியில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ நேற்று ( 4-ம் தேதி)  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here