குளச்சல்: இறந்த நிலையில் திமிங்கலப் புள்ளி சுறா

0
59

கொட்டில் பாடு பகுதியில் நேற்று திமிங்கலப் புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து உள்ளூர் மக்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, சுறா உயிரிழந்தது தெரியவந்தது. அரசின் பாதுகாப்பு பட்டியலில் உள்ள இந்த சுறா பின்னர் அதிகாரிகளால் புதைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here