சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர், மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர்.













