தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக, காந்தி மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்கரை வரை தூய்மை பணி பேரணி நடைபெற்றது. இதில் புள்ளியியல் அலுவலகத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.