Google search engine

தக்கலை: பாரதிய ஜனதா பிரமுகர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே புங்கறை பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகி இந்திரகுமாரின் மனைவி விஜயகுமாரி (43) நேற்று (மார்ச் 29) மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகுமாரி, ஏற்கனவே விஷ மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றதும், தற்போது தூக்கு போட்டு...

புதுக்கடை: பைக்கில் தவெக கட்சி தலைவர் படம், கொடி – வழக்கு

மேலங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் விஷால், தேர்தல் விதிமுறைகளை மீறி தனது இருசக்கர வாகனத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் படம் மற்றும் கட்சி சின்னத்தை ஒட்டி பொது வெளியில் சுற்றி திரிந்ததாகக் கூறப்படுகிறது. புதுக்கடை போலீசார் நேற்று கைசூண்டி சந்திப்பில் அவரை கைது...

குமரி: வீட்டுக்கு சீல்; நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்

காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரசல்ராஜ் (58) மற்றும் அவரது மனைவி அனிதா (53) ஆகியோர், வங்கியில் பெற்ற ₹15 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், கடந்த 26 ஆம் தேதி அவர்களது வீட்டைப் பூட்டி சீல் வைக்க வந்த காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக்...

சட்டமன்றத் தேர்தல் பாரம்பரிய மருத்துவர்கள் ஆதரவு யாருக்கு?

இந்திய கிளினிக் மருத்துவ சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டியில், பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பதிவு இல்லாததால் போலி மருத்துவர்கள் என நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எந்த அரசியல் கட்சி பதிவு வழங்கும்...

குமரி: விபத்தில் பெண் பலி.. அரசு பஸ் டிரைவருக்கு சிறை

நாகர்கோவிலில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, ரவி தனது மனைவி ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்து மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டது. நாகர்கோவிலில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்...

தக்கலை: கஞ்சா விற்ற கேரளா இளைஞர் கைது

தக்கலை அருகே குமாரகோவில் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சுமார் 130 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அனாஸ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்....

விளவங்கோடு: நடன போட்டி; பாஜக நிர்வாகி விஜயதரணி துவக்கினார்

விளவங்கோடு, தோட்டத்துமடம் நவநீத கிருஷ்ண சுவாமி கண்டேஷ்வரர் பத்ரகாளியம்மன் கோயிலில் 683ஆம் ஆண்டு பஜனை பட்டாபிஷேகம் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற...

கொல்லங்கோடு: பெண்ணிடம் ரூ 8 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு

நடைக்காவு பகுதியைச் சேர்ந்த 70 வயதான தாசம்மாவிடம், அதே ஊரைச் சேர்ந்த ஷெரின் என்பவர் தனது 16 சென்ட் நிலத்தை விற்பதாகக் கூறி, வங்கி மூலம் ரூ. 8 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், நிலத்தை தாசம்மாவுக்குப் பதிலாக செல்வன் என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த தாசம்மா...

கன்னியாகுமரியில் களம் இறங்கும் தளவாய்சுந்தரம்

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது. இதில், 23 தொகுதிகளில் 21 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வேட்பாளர்...

மது பிரியர்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு – மக்கள் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் கடையல் அருகே சிற்றாறு 1 பகுதியில் மது பிரியர்கள் தினமும் மது அருந்திவிட்டு கழிவுகளை அணைக்கட்டு சுற்றுப்புறங்களில் கொட்டி சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனையால்...