Google search engine

கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தச் சங்கிலியைப் பறித்த நபர் தப்பி ஓடிவிட்டான்....

குமரியில்: தீ குளித்த தவெக செயலாளர் உயிரிழப்பு

கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் இசக்கியப்பன்(41), விஜய் ஆட்சி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று...

ரீத்தாபுரம்: குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்

குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் உள்ள கரையாக்குளம் விவசாயத்திற்கும், 3 ஆழ்குழாய் கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்து கிடக்கும் மரத்தால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர். அடுத்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் மரத்தை அகற்ற வேண்டும் என...

குலசேகரம்: டெம்போ மோதி 4 வயது குழந்தை சாவு

நாகக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் 4 வயது மகன் திஷான், சர்ச் திருவிழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நடன ஒத்திகை முடிந்து வீடு திரும்பும் போது, எதிரே வந்த டெம்போ மோதி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து...

பிஎஸ்என்எல் நெட்வொர்க் சீர்குலைவு: மக்கள் கொந்தளிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம்வயல், களியல் உள்ளிட்ட பல பகுதிகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருநூறாம்வயல் பகுதியில் வீட்டின் உள்ளே தமிழக நெட்வொர்க்கும், வெளியே கேரள நெட்வொர்க்கும் கிடைப்பதால் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேணு பகுதியில் டவர் இருந்தும் பயனில்லாமல்...

நாகர்கோவிலில் சாலையோரம் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில் கோட்டார் முதல் சவேரியார் கோவில் வரை சாலையோரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்படுவதோடு, விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலில், போக்குவரத்தைச் சீரமைத்து விபத்துகளைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள்...

குமரியில்: பெண் கடத்தல்; 15 பேர் மீது வழக்கு

குமாரகோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் என்பவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் களியக்காவிளை மாணவி ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில், மாணவி ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், களியக்காவிளையை சேர்ந்த சுராபுதீன், ஜாஸ்மின் மற்றும் மேலும் 13 பேர் கொண்ட கும்பல் ஆகாஷ் வீட்டிற்குள் புகுந்து...

குமரி: திற்பரப்பு அருவியில் வெள்ளம் பயணிகள் உற்சாகம்

கோடை காலத்தில் வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியில், வெப்பச்சலனத்தால் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அருவிக்கு வருகை தந்துள்ளனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டும் இந்த அருவி, தற்போது மீண்டும் உற்சாகத்துடன் காட்சியளிக்கிறது.

குமரியில்: இஸ்ரேலுக்கு அனுப்புவதாக வாலிபரிடம் பணம் மோசடி

வள்ளவிளை பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த சைமன் (29) என்பவர் இஸ்ரேலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தராததால், பிரவீன் பணத்தை திரும்ப கேட்டபோது சைமன் தர மறுத்துள்ளார். இது குறித்து பிரவின் கொல்லங்கோடு காவல்...

குமரியில்: சுகாதாரத் துறைக்கு புகாரளித்த பெண் மீது தாக்குதல்

கொல்லங்கோடு பகுதியில் பன்றி பண்ணையால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து நிமிஷா என்பவர் சுகாதாரத் துறைக்கு புகார் அளித்துள்ளார். இதற்குக் கோபமடைந்த பண்ணை உரிமையாளர்கள் நிமிஷாவைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த நிமிஷா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...