கொல்லங்கோடு பகுதியில் பன்றி பண்ணையால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து நிமிஷா என்பவர் சுகாதாரத் துறைக்கு புகார் அளித்துள்ளார். இதற்குக் கோபமடைந்த பண்ணை உரிமையாளர்கள் நிமிஷாவைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த நிமிஷா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















