Google search engine

குமரியில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி ரோடு அப்டா வழியாக 4 வழிச்சாலையில் செல்ல...

குமரி: கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரம்

குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கனிமொழி எம்பி நேற்று (ஏப்ரல் 13) வருகை தந்தார். அவர் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளில் பேசியபோது, திமுக ஆட்சி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். திமுக வேட்பாளர்களான மகேஷ், ஆஸ்டின், தாரகை கர்ப்பர்ட், செல்லசாமி ஆகியோரை...

திருவட்டாறு: ஆஞ்சநேய சுவாமி கோவில் விஷூ தரிசனம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு அருகே உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இன்று விஷூக்கணி காணும் நிகழ்வும், கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ஆஞ்சநேய சித்தர் தலைமையில் கல்வியாளர் பிருந்தா ஸ்ரீகுமார் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு பழங்கள், காய்கறிகள், மலர்கள் படைக்கப்பட்டு விஷூக்கணி காணப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு...

குமரி: மூளைச் சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மார்த்தாண்டம், பயணம் பகுதியைச் சேர்ந்த லதா (50) என்பவர் தனது மகனுடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்து சுயநினைவை இழந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். மருத்துவர்களின் அறிவுரைப்படி, உறவினர்களின் சம்மதத்துடன் லதாவின் கல்லீரல், இரண்டு...

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி நீக்கம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்த ஜோஸ்லால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுகிறார். அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் மனுவை நிராகரிக்க தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். கட்சியின் ஒழுங்குமுறைக்கு எதிரானது எனக் கருதி, மாநில தலைமை ஜோஸ்லாலை அடிப்படை...

உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்வார்.

தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு

தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில்,...

மார்த்தாண்டம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்

நேற்று, உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த சபின் (30) தனது தாயார் லதாவுடன் பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றார். சூசைபுரம் பகுதியில் சென்றபோது, லதாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு...

நாகர்கோவில்: ஜல்லிகள், எம். சாண்ட் விலை உயரும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் வரவில்லை. இதன் விளைவாக, மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஜல்லி, எம்...

குளச்சல்: கடலில் ஒரு சிறுவன் மாயம்; 2 சிறுவர்கள் மீட்பு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள் மீட்கப்பட்டனர். மாணவரை மீட்கும் பணியில் குளச்சல் போலீசார் மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்....