Google search engine

குழித்துறை நகராட்சி ஆணையரை மிரட்டிய பாஜ கவுன்சிலர் – வழக்கு

குழித்துறை நகராட்சி ஆணையராகப் பணியாற்றும் வெங்கடாசலம், கடந்த 27ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாஜக கவுன்சிலர் விஜூ, அவரை அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார், ஆணையரை மிரட்டியதாகக் கூறப்படும் கவுன்சிலர் மீது...

குமரி: அம்மன் கோவிலில் வெள்ளிக்கவசம் திருட்டு

மார்த்தாண்டம் தாணிமூடு இசக்கியம்மன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி பூஜைக்குப் பிறகு கோவில் ஆபரணங்கள் அறையில் பூட்டி வைக்கப்பட்டன. 27ஆம் தேதி மீண்டும் பூஜைக்காக பூசாரி சென்றபோது, அறைப் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு கிலோ வெள்ளி முக கவசம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பூசாரி நாகப்பன்...

நாகராஜா திருக்கோவிலில் உலா வந்த குட்டி ராஜநாகம்

நாகர்கோவிலில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் வளாகத்தில் நேற்று ஒரு குட்டி ராஜநாகம் உலா வந்தது. நாக வழிபாட்டிற்குச் சிறப்புப் பெற்ற இந்த ஆலயத்தில், சிறிய ராஜநாகம் ஊர்ந்து சென்றதைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியத்துடனும் பக்தி பரவசத்துடனும் பார்த்தனர். இந்த அபூர்வ நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே...

குமரி: மாதா குருசடி உடைப்பு; உண்டியல் மாயம்

திருவட்டாறு பகுதி கல்லறவிளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோயிலில், மாதா சுரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு, சுரூபத்தின் கீழ் இருந்த இரும்பு உண்டியல் திருடப்பட்டுள்ளது. நேற்று காலை பொதுமக்கள் இதை கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஆலய பங்கு பேரவை துணைத் தலைவர் ஜெரின் திருவட்டாறு போலீஸ்...

தளியல்: ஸ்ரீ ஜடாதீஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம்

திருவட்டாறு தளியல் தெரு ஸ்ரீஜடாதீஷ்வரர் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம், கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இன்று வைகாசி விசாக காவடி யாத்திரையும், வரும் 30 ஆம்...

திருவட்டாறு: 88 வயது தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரியமைக்கேல் (40). இவர் மனைவியை பிரிந்து வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று 88 வயது தந்தை கபரியேல் என்பவரை ஆபாசமாக திட்டி, வீட்டை அடித்து உடைத்து...

புதுக்கடை: டீக்கடை முன் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

புதுக்கடை, அம்சி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் விஜயகுமார் (42) என்ற கூலித் தொழிலாளி டீக்கடை முன் நின்றபோது திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே...

நாகர்கோவில்: திமுக அலுவலகம் கேட் உடைப்பால் பரபரப்பு

நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு, அவ்வழியே சென்ற சிலர் மாறி மாறி தாக்கி சண்டையிட்டதால் கேட் உடைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக கொடியுடன் வந்தவர்கள் சண்டையிட்டதில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திமுகவினர் அங்கு குவிந்தனர்.

நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், அரிசி கடத்தல் என்ற பெயரில் தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் உத்தரவின்படியே பணிபுரிந்ததாகக் கூறும் தொழிலாளர்கள், தங்கள் மீதான வழக்குகளைத்...

இரணியல்: 3 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை

ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஹெலன் நேற்று தனது வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டை உடைத்து 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும், அவரது பக்கத்து வீடான கோபால் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. எதிர் வீட்டில் வசிப்பவரின் வீட்டிலும் திருட்டு நடைபெற்றுள்ளது....