Google search engine

குமாரபுரம்: வீட்டில் இருந்த பெண் மாயம் – புகார்

குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் (53) என்பவர், தனது மனைவி கிரேசி (48) காணாமல் போனதாக கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செல்போன் கடையில் வேலை பார்க்கும் இவர்களது மகனிடம் செல்போன் வாங்கிவிட்டு, தவணை செலுத்தாத ஜஸ்டின் என்பவருடன் கிரேசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கணவர்...

கன்னியாகுமரியில் பைக் மோதி +2 மாணவி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே மகாராஜபுரம் சாலையில் நடந்து சென்ற +2 மாணவி சிவ சந்தியா (18) மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கடை: டாஸ்மாக் கடையை மூட தேமுதிக ஆர்ப்பாட்டம்

புதுக்கடை சந்திப்பில் கிறிஸ்தவ ஆலயத்திற்கும், பஸ் ஸ்டாண்டிற்கும் அருகாமையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, தேமுதிக சார்பில் மாவட்டப் பொருளாளர் செல்லத்துரை தலைமையில் இன்று (27-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஐடன் சோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு,...

நாகர்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் குமரி மாவட்ட குழுக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். ராஜகுமார், நாகராஜன், செண்பகசேகரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவி...

கருங்கல்: பெண்ணின் வீடு சூறை; 4 பேர் மீது வழக்கு

கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுந்தரஜோதி (35) என்பவர், தனது தம்பி சரவண பிரியன் மற்றும் அவரது மனைவியின் தம்பி உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்துள்ளார். முன்விரோதம் காரணமாக நேற்று, சரவண பிரியன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுந்தரஜோதியின் வீட்டிற்குள் புகுந்து, மின்சார...

புதுக்கடையில் தாயுடன் தூங்கிய கல்லூரி மாணவி மாயம்

புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தர்ஷனா, வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் விஜிலா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...

குமரியில்: வெடிபொருள் பதுக்கிய பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது

திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் குணசீலன் (52) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலை விற்பனை தொடர்பாக போலீஸார் சோதனை செய்தபோது இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக குணசீலன் மற்றும் ராஜன் ஆகிய...

செங்கல் சிவபார்வதி கோயிலில் இலவச நோட் புத்தகங்கள் வழங்கல்

களியக்காவிளை அருகே உள்ள செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா, புத்தகப் பை, குடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்க அறிவுரை வழங்கி...

தமிழகத்தில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது -அமைச்சர்

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இருபது நாட்களே ஆன நிலையில், காவல்துறை மற்றும் சிங்கப்படை போன்ற அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாகவும், உடனடியாக குற்றங்களைக் கண்டறிவது கடினம் என்றும்...

குளச்சல்: சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் கைது

நேற்று முன்தினம் வாணியக்குடி கடற்கரைக்கு சென்று திரும்பிய ஷானு (34) என்பவர், அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை செல்போனில் தவறான முறையில் படம்பிடிக்க முயன்றார். மாணவி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் துரத்த முயன்றபோது ஷானு செல்போனை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். இது...