Google search engine
காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வர வேண்டும் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு வருகை தந்த எர்டோகனை, நூர் கான் விமானப்படை தளத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-பும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் வரவேற்றனர். துருக்கி அதிபருடன் அவரது மனைவி எமின் எர்டோகன், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் வந்துள்ளனர். பிரதமர் மாளிகையில் எர்டோகனுக்கு அணிவகுப்பு மரியாதை...
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் உரையாடி உள்ளார். இதனை தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்த ட்ரம்ப், "நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் நாடுகளின் பலங்களைப் பற்றியும், ஒன்றாகச் செயல்பட்டால் கிடைக்கும் பெரும் நன்மைகளைப் பற்றியும் பேசினோம். முதலில்,...
பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் ஏஐ ஆராய்ச்சியில் இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10-ம் தேதி பாரிஸ் சென்றார். நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இந்த மாநாட்டை தொடர்ந்து,...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(சிஇஓ) சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி 2 நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு(ஏஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஏஐ உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடியை கூகுள் நிறுவன...
வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எப்சிபிஏ எனப்படும் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், புதிய சட்டத்தை உருவாக்கும்படியும் அட்டர்னி ஜெனரலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய...
இந்தியா உடனான உறவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் அதிகாரி லிசா கர்டிஸ், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு ‘செக்’ வைக்க இந்தியாவே சரியான நாடு என ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதை முன்னிட்டு வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான தி சென்டர்...
தாய்லாந்தைச் சேர்ந்த 3 வயது நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில், நக்கோன் ராட்சசிமாவில் என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் ஒரு நீர் எருமை வாழ்ந்து வருகிறது. 3 வயதில் வழக்கமாக ஒரு நீர் எருமை இருக்கும் உயரத்தைவிட, 20 அங்குலம் உயரமாக உள்ளது. தற்போது, 6 அடி, 8 அங்குல உயரம் கொண்டதாக அறியப்படுகிறது. அனைவரிடமும் நன்றாக...
பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய இந்திய ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் அதிரடி சோதனையை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் பேரை பிரிட்டன் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணியை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. அதுபோன்ற பணியை தற்போது பிரிட்டன் அரசும் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டறியும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வாரம் முதல் ஈடுபட்டு...
திருமணம் செய்யாமல் பல பெண்களின் வருமானத்தில் ஜாலி வாழ்க்கை வாழும் ஜப்பானியருக்கு 54 குழந்தைகள் பெற்று சாதிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். ஜப்பானைச் சேரந்தவர் ரூய்டா வாட்டாநபே(36). பள்ளிப் படிப்பை கைவிட்ட இவர், 3 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பகுதி நேர வேலை செய்துள்ளார். இவர் சமூக ஊடகத்தில் பிரபலமான ‘ஹிமோ ஒடோகோ’. அப்படியென்றால் ஜப்பான் மொழியில் பெண்களின் வருமானத்தை சார்ந்திருக்கும் நபர். இவர் பார்க்க ‘அமுல் பேபி’...
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதி​யில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்​றது. அப்போது, திடீரென அந்தப் பகுதி​களில் நுழைந்த ஹமாஸ் தீவிர​வா​திகள் 100-க்​கும் மேற்​பட்​ட​வர்களை ஹமாஸ் பிணைக்கை​தி​களாக பிடித்​துச் சென்​றனர். இந்த நிலை​யில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்​புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்​கொள்​ளப்​பட்​டதையடுத்து, இரு தரப்​பிலிருந்​தும் பிணைக் கைதிகள் படிப்​படியாக விடுவிக்​கப்​பட்டு வருகின்​றனர். அதன் ஒரு பகுதி​யாக, சிறைப்​பிடிக்​கப்​பட்டு 500 நாட்​களுக்​குப்...