Google search engine
அமெரிக்க அதிபரின் பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தி வருகின்றனர். வர்த்தக வரி விதிப்பு, அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எல்லை மீறி செயல்படுவதாக கூறி, வாஷிங்டன், நியூயார்க், ஹுஸ்டன், ப்ளோரிடா, கொலராடோ, லாஸ்...
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “எதையாவது சரி செய்ய வேண்டுமென்றால் சில நேரங்களில் மருந்து அவசியம் தானே” என்று தனது வரிவிதிப்பு நடவடிக்கையை நியாயப் படுத்திப் பேசியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஃப்ளோரிடாவில் கோல்ஃப் விளையாடிவிட்டு வாஷிங்டன்னுக்கு திரும்பிய ட்ரம்ப் விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி...
அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். இதுதொடர்பான நகைச்சுவை 'மீம்ஸ்கள்' சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதன்படி 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த பட்டியலில் அன்டார்டிகாவில்...
கனடாவில் தலைநகருக்கு அருகே இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தது எங்களுக்கு...
உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார். “இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில்...
நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தனது தந்தையின் தாய்நாடான இந்தியாவுக்கு பயணம் செய்து தனது அனுபவங்களை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்வேன் என்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்கு தங்க நேரிட்டது....
சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார். இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையில் ராஜதந்திர உறவுகளை கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ஏற்படுத்திக் கொண்டன. இதன் 75-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அப்போது திரவுபதி...
இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களின் மீதும் 100 சதவீத வரிகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து வெள்ளை மாளிகை...
சீனாவின் ஹுபெய் பகுதியை சேர்ந்தவர் யாங் (18). இவர் தற்போது ஹூனான் மாகாணம், ஜூஜோவ் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மாதம் வருமானம் ரூ.31,776 ஆகும். ஜூஜோவ் நகரில் ஒரு வீட்டின் வாடகை ரூ.9,500 முதல் ரூ.21,000 வரை உள்ளது. யாங் பெறும் ஊதியத்தில் பாதியை அவரது பெற்றோருக்கு அனுப்புகிறார். மீதமுள்ள ஊதியத்தில் அவரால் வீட்டு வாடகை கொடுப்பது கடினம். இந்த சூழலில் பர்னிச்சர் கடையின்...
தாய்லாந்தின் பாங்காக் நகரில் கட்டிய 30 மாடி கட்டிடம் நிலநடுக்கத்தால் தரைமட்டமானது தொடர்பாக சீன கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்தில் கடந்த 28-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. பாங்காக்கில் பல்வேறு உயரமான கட்டிடங்கள் உள்ளன. நிலநடுக்கத்தின்போது சுமார் 95 சதவீத உயரமான கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் 30 மாடி...