Google search engine
வரும் மே மாதம் 9-ம் தேதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடை​பெற்ற இரண்​டாவது உலக போரில் ஜெர்​மனி​யும் அப்​போதைய சோவி​யத் யூனியனும் கடுமை​யாக மோதிக் கொண்​டன. பின்​னர் 1945-ம் ஆண்டு சோவி​யத் யூனியன் தாக்​குதலை சமாளிக்க முடி​யாத ஜெர்​மனி​யின் நாஜி படைகள் சரணடைந்​தன. அதன்​படி 80-வது ஆண்டு...
உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று கெடுபிடி காட்டியுள்ளார். பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலகின் பல நாடுகள் கடுமையான பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் நாணயமான ‘யுவான்’ மதிப்பு 17 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பு அளவுக்கு சரிந்துள்ளது. சீன இறக்குமதிகள் மீது 104% வரி உட்பட அமெரிக்காவின் புதிய வரிகள் புதன்கிழமை (ஏப்.9) முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால், சீன நாணயத்தின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. சீனா நாணயமான...
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% ஆக உயர்த்தி உள்ளார். உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின்...
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 3.31 லட்சம் பேர் இந்திய மாணவ, மாணவியர் ஆவர். சுமார் 2.77 லட்சம் சீன மாணவர்கள். 43,149 தென்கொரிய மாணவர்களும் அமெரிக்காவில் பயில்கின்றனர்....
அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை. இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி...
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், மறுநாள் அதாவது, ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும்...
அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “சீனா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34% பழிவாங்கும் வரிகளை விதித்தது. ஏப்ரல் 8-ம் தேதிக்குள் சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை...
அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற இந்து கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அபுதாபில் பொச்சசன்வாசி ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் கோயில் (பிஏபிஎஸ் கோயில்) உள்ளது. இது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், பக்தி மற்றும் உலகளாவிய இந்து பெருமையின் அடையாளமாக விளங்குகிறது. இந்நிலையில், பிஏபிஎஸ் கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா நேற்று முன்தினம்...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை (ஏப்.07 ) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, உலகையே உலுக்கி வரும் அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்புகளை குறைக்குமாறு நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலஸ்தீனம், ஹமாஸ், ஈரான் உடனான பதற்றமான சூழல் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் உரையாடியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பேசிய நெதன்யாகு, “மீண்டும் ஒருமுறை என்னை வெள்ளை மாளிகைக்கு...