Google search engine
அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாய் சைனி. பெண் மருத்துவரான இவர் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டை சேர்ந்த மைக்கேல் குரோபை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிக்கு கரீனா, ஜார்ட், அனிதா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். வார விடுமுறையை கொண்டாட மைக்கேல் குரோப் குடும்பத்தினர், நியூயார்க் மாகாணம், வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து...
அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். சமீபத்தில் உலக...
: அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், இதற்கு இணங்க மறுத்தால் அபராதமும் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், உடனடியாக அமெரிக்க அரசில் தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். இதனை ஏற்கத் தவறுவது சிறை தண்டனை மற்றும்...
வடக்கு உக்ரைன் நகரமான சுமியின் மீது ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட மோசமான இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் எதிர்வினையைக் கோரியுள்ளார். தரையில் கிடக்கும் சடலங்கள், அழிக்கப்பட்டப் பேருந்து, வீதிகளின் மத்தியில் எரிந்து கிடக்கும் வானங்கள் என...
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் 'அந்நியர் பதிவு சட்டம் 1940' அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். மிக நீண்ட காலமாக 'அந்நியர் பதிவு சட்டம்' கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை. தற்போதைய...
பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான வர்த்​தகத்தை கையாளும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அந்த ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன் நேற்று கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​ததற்கு இணை​யாக நாங்​களும் பதிலடி வரி...
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் புதிய கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவருடன் பணியாற்றிய அரசியல் தலைவர்கள், அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் மீது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்சாட்டு, தலைமறைவு குற்றச்சாட்டின் கீழ் வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம்...
அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்தியுள்ளார். பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஹட்சன் ஆற்றின் மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலா...
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் விவாகரத்து என்ற வதந்திகளை நிராகரித்துள்ளார் அவரது மனைவி மிஷெல் ஒபாமா. பிரபல நடிகை நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடிய மிஷெல் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பெண்ணுரிமை சார்ந்த சில விஷயங்களை அவர் முன்வைத்துப் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. சமீபத்தைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்தது குறித்து மனம் திறந்த அவர், தனது முடிவுகளுக்கு தனது சொந்த நலனுக்கு முன்னுரிமை...