Google search engine
பாகிஸ்தானில் அமெரிக்கவைச் சேர்ந்த சங்கிலித் தொடர் துரித உணவு கடைகளான கேஎஃப்சி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்தனர். அமெரிக்க எதிர்ப்புணர்வு மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேஎஃப்சி கடைகள் மீது கும்பல் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சமீப வாரங்களாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்...
கரீபியன் நாடான பெலீசுவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் (49) சுட்டுக் கொல்லப்பட்டார். கரீபியன் கடல் பகுதியில் பெலீசு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் கோரசோல் நகரில் இருந்து சான் பெட்ரோ நகருக்கு சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 14 பேர் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்...
விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்று சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ஏசிஐ) தெரிவித்துள்ளது. உலகின் வேகமான சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் விமானப் பயணிகள் போக்குவரத்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 10.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனாவுக்கான மதிப்பீடான 12 சதவீதத்தை விட குறைவாகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவுக்கு மிகப் பெரிய...
“வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும்...
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வாகனம், விண்வெளி, செமிகண்டெக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு இன்றியமையாததாக விளங்கும் மிகவும் அரிதான உலோகங்கள் மற்றும் காந்தங்கள் உள்ளிட்ட முக்கிய உயர் தொழில்நுட்பப்...
ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது ‘லிங்க்டுஇன்’ (LINKEDIN) பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பொறுத்தவரை, அவர்களுக்கான மரியாதையும், வேலைவாய்ப்பும், அதற்கான சம்பளமும் மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, ஊழியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்வது...
அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு...
விண்வெளி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பிய தனது காதலியை தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார். தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், ப்ளு ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை தொடங்கி விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ப்ளூ ஆர்ஜின் என்ற ராக்கெட்டும், 6 பேர் பயணம் செய்யும் வகையில் ‘நியூ செபார்ட்’ என்ற விண்கலமும் உருவாக்கப்பட்டது. இதில் பிரபல பாப் பாடகி கெட்டி பெர்ரி, தொழிலதிபர் ஜெஃப் பெசோசின்...
2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான சீனாவை அனுபவியுங்கள்.” என்று இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் வரவேற்றுள்ளார். ட்ரம்ப் கெடுபிடியின் விளைவாக.. அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளி சீனா. அதுமட்டுமல்ல பொருளாதார போட்டியாளரும் கூட. இந்தச் சூழலில் தான் கடந்த...
ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதில் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸும் பயணித்தார். அவருடன் விமானியும் முன்னாள் பத்திரிகையாளருமான சான்செஸ், பாடகர் மற்றும் பாடலாசிரியர் கேட்டி பெர்ரி மற்றும் ‘சிபிஎஸ் மார்னிங்ஸ்’ இணை தொகுப்பாளர் கெயில் கிங், திரைப்பட தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளின், முன்னாள் நாசா பொறியாளர் ஆயிஷா போவ், விஞ்ஞானி அமண்டா ஆகியோர்...