கடந்த ஆண்டு இந்​தியா நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது, பாகிஸ்​தானுக்​குக் களத்​தில் தொழில்நுட்ப உதவி வழங்​கியதை சீனா முதல்​முறை​யாக உறுதிப்படுத்தியுள்​ளது. கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் காஷ்மீரின் பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலில் சுற்​றுலாப் பயணி​கள் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களுக்கு தொடர்பு இருப்​பது தெரிய வந்​தது. இதையடுத்​து, மே மாதம் பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக ‘ஆபரேஷன் சிந்​தூர்' என்ற பெயரில் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத...
வட​கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடு​கள் மீது தானாகவே அணு ஆயுத தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அந்த நாடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இது வடகொரி​யா​வின் ‘டெட் ஹேண்ட்' என்​றழைக்​கப்​படு​கிறது. கடந்த 1980-களில் சோவி​யத் யூனியன் (ரஷ்​யா) ‘டெட் ஹேண்ட்' என்ற அணு ஆயுத கட்​டளை அமைப்பை உரு​வாக்​கியது. எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்​குதலால் ரஷ்யா அழிந்​து, அதன் தலை​வர்​கள் உயி​ரிழந்​தால் ‘டெட் ஹேண்ட்'...
ஈ​ரான் போருக்கு உதவும் வகை​யில், இராக்​கின் பாலை​வனப் பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​துள்​ளது. இதை இராக் படை​யினர் கண்​டு​பிடித்​த​போது, அவர்​களை விரட்டியடிக்க இஸ்​ரேல் வான் தாக்​குதலை​யும் நடத்​தி​யுள்​ளது. இராக்​கின் மேற்கு பாலை​வனப் பகுதி மிகப் பெரியது. இங்கு மக்கள் நடமாட்​டம் இருக்​காது. கடந்த 1991-2003-ம் ஆண்​டு​களுக்கு இடையே சதாம் உசேனுக்கு எதி​ராக நடவடிக்​கை மேற்​கொண்​ட​போது, அமெரிக்க ராணுவம் இப்​பகு​தியை ராணுவத் தளமாக பயன்​படுத்​தி​யது. இப்​பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவ​மும் இராக்​குக்கு தெரி​யாமல்...
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் அளித்த பதிலை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.  தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் பிரதிநிதிகள் அனுப்பிய பதிலை இப்போதுதான் வாசித்தேன். இது எனக்குப் பிடிக்கவில்லை; இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார். எனினும் நிராகரிப்புக்கான காரணம் குறித்து அவர் தெளிவாக எதையும் விளக்கவில்லை. முன்னதாக...
பல ஆண்​டு​களாக நீண்ட விடு​முறை, ரிமோட் ஒர்க், ஆரோக்​கி​யம் சார்ந்த தங்​குமிடங்​கள் மற்​றும் பேக்​பேக்​கிங் சாகசங்களுக்​குத் தாய்​லாந்து மிக​வும் பிரபல​மான நாடு​களில் ஒன்றாக இருந்து வரு​கிறது. இப்​போது, நவீன காலப் பயணி​களுக்​காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற ஒரு விசா மூலம், அந்த நாடு தனது நற்​பெயரை இன்​னும் வலு​வாக முன்​னெடுத்​துச் செல்​கிறது. ‘டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா’ என்று அழைக்​கப்​படும் இது சுமார் ரூ.25 ஆயிரத்துக்கு கிடைக்​கிறது. இந்த 5 ஆண்டு கால மல்​டிபிள்​-என்ட்ரி...
உலக நாடு​களி​லிருந்து இறக்குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடு​தல் வரி செல்​லாது என்று அமெரிக்க சர்​வ​தேச வர்த்தக நீதி​மன்​றம் தீர்ப்பளித்​துள்​ளது. அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் கடந்த பிப்​ர​வரி மாதம் பெரும்​பாலான இறக்​கும​திப் பொருட்​களுக்கு 10 சதவீத வரியை விதித்​தது. இதை எதிர்த்து 24 மாகாணங்​களும், சில தனி​யார் நிறு​வனங்​களும் கடந்த மார்ச் மாதம் வழக்​குத் தொடர்ந்​தன. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிப​தி​கள் கொண்ட...
நெதர்​லாந்து சொகுசுக் கப்​பலில் பணி​யாற்​றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்​பட்டு உள்​ளது. நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த ஏப்​ரல் 1-ம் தேதி அர்​ஜென்​டி​னா​வின் உஷு​வாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்​கியது. இதில் 150 பயணி​கள் மற்​றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்​கள் இருந்​தனர். அண்​டார்​டிகா மற்​றும் தெற்கு அட்​லான்​டிக் பகு​தி​களின் தீவு​களுக்கு சொகுசு கப்​பல் பயணம் மேற்​கொண்​டது. புறப்​பட்ட...
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது போராக இதை மாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தற்காலிக அமைதி நீண்ட காலப் போர்நிறுத்தத்துக்கான தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை...
அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரானின் அணுசக்தி திட்டம்,...
மேற்கு ஆப்​பிரிக்​கக் கடற்​கரை​யில் சுமார் 150 பயணி​களு​டன் நிறுத்​தப்​பட்​டுள்ள சொகுசுக் கப்​பல் ஒன்​றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்​பட்​டுள்​ளது. இதன் பாதிப்​பால் 3 பயணி​கள் உயி​ரிழந்​தனர். மேலும் பலர் உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்த வைரஸ் மனிதர்​களிடையே பரவக்​கூடிய தன்​மை​யைக் கொண்​டிருக்​கலாம் என்ற தகவல் சர்​வ​தேச அளவில் அச்​சத்தை அதி​கரித்​துள்​ளது. இந்த ஹன்டா வைரஸ் எலிகள் மற்​றும் பெருச்சாளி​கள் மூலம் மனிதர்​களுக்​குப் பரவு​கிறது. அவற்​றின் எச்​சில், சிறுநீர் அல்​லது கழி​வு​களு​டன் நேரடித்...