பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள மலேசியாவின் ஓங் இயூ சின், தியோ யீ ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சாட்விக்-ஷிராக் ஜோடி21-13, 24-22 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம்...
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் தகுதி சுற்றில் வெற்றி பெற்றார்.அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர்ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், வைல்டு கார்டு வீரரான அமெரிக்காவின் ஸ்டீபன் டோஸ்தானிக்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் சுமித் நாகல் 10 தரவரிசை புள்ளிகளையும்...
சர்வதேச போட்டியில் செயல்படுவதற்கு நடுவர் லிண்டனுக்கு தகுதி இல்லை: வனிந்து ஹசரங்கா குற்றச்சாட்டு
admin - 0
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் செயல்படுவதற்கு நடுவர் லிண்டன் ஹன்னிபாலுக்கு தகுதி இல்லை என்று இலங்கை அணி கேப்டன் வனிந்து ஹசரங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி தம்புல்லா நகரில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள்...
இங்கிலாந்து அணியின் உயரமான ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் தன் முதல் 5 விக்கெட் பவுலிங்கை தன் தாத்தாக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்திய அணி வெற்றி பெற மேலும் 152 ரன்கள் தேவை என்ற நிலையில் 10 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து வீழ்த்தினால்தான் வெற்றி. பிட்சில் பந்துகள் மிக மிக தாழ்வாக வருகின்றன. சில பந்துகள் எழும்புகின்றன, திரும்புகின்றன. ஆகவே இந்திய அணிக்குக் கடினம், நாங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்தப் பிட்சில் என்ன...
இந்தியா சிமெண்ட் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசனில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஐசிபிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ், காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து...
நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரு சர்வதேச டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து...
IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு: அஸ்வின், குல்தீப் அபார பந்துவீச்சு
admin - 0
இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் அந்த அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு...
கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர் யார் என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் பெல்ஜியம் நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் எடன் ஹசார்ட். அது மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இவர்கள் இருவரில் யார் தலைசிறந்தவர் (GOAT) என்ற ஒப்பீடுகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அது அவர்கள்...
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.
தென் கொரியாவின் பூசான் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 11-7, 11-3, 11-6 என்ற செட்கணக்கில்ரிம்மாகுஃப்ரா னோவை தோற்கடித்தார். 2-வது ஆட்டத்தில் தியா சித்தலே 11-6, 10-12, 11-4,...
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை உருவாக்கும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மூன்றடுக்கு கொண்ட இந்த அகாடமியின் தரைதளத்தில் பன்நோக்கு விளையாட்டுத் தளம், முதல் தளத்தில் டேக் வாண்டோ மற்றும் ஜூடோ விளையாட்டுத் தளம், இரண்டாவது தளத்தில் வாள்வீச்சு தளம் மற்றும் மூன்றாவது தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றை நேற்று...










