நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் 137 ரன்கள் என்ற இலக்கை பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக போராடி எடுத்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அந்த அணி வீரர் ராஸ்டன் சேஸின் ஆட்டம் இலக்கை சேஸ் செய்ய பெரிதும் உதவியது.
கயானவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது....
இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்களுக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா...
2024 ஐபிஎல் சாம்பியன் அணியாக கம்பீர் வழிநடத்திய ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், ஸ்டார்க் கூட்டணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது குறித்து இந்த ஐபிஎல் தொடரின் 2வது சிறந்த அணியான சன் ரைசர்ஸின் கேப்டன் பாட் கமின்ஸ் ‘நண்பனிடம் தோற்றோம்’ என்று மிட்செல் ஸ்டார்க்கை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதாவது உண்மையான பவுலிங், உண்மையான பேட்டிங் பவர் ஆகியவற்றுக்கு எதிராக ஐபிஎல்...
தென் ஆப்பிரிக்காவுக்கு 3-0 ஒயிட் வாஷ் தோல்வி: அதகள வெற்றியில் எழுச்சி பெறும் மே.இ.தீவுகள்!
admin - 0
சபைனா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வலுவான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி 3-0 என்று முழு தொடரையும் வென்று ஒரு அரிதான ஒயிட் வாஷை தென் ஆப்பிரிக்காவுக்கு பரிசாக அளித்தது.
கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா 11 முடிவு தெரிந்த டி20 போட்டிகளில் 2-ல் தான் வென்றுள்ளது என்பதும் அவர்களுக்கு...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. எனினும், அதிக ரன்கள் அடித்த வீரர்களின் டாப் 5 பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலியே முதலிடம் பிடித்துள்ளார். வழக்கத்துக்கு மாறாக இந்த ஐபிஎல் ரன்கள் அதிகம் குவிக்கும் தொடராக அமைந்தது. பல...
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பர்ப்பிள் நிற தொப்பியை வென்றுள்ளார் ஹர்ஷல் படேல். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பேட்ஸ்மேன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த சீசனில் பந்துவீச்சாளர்களும் திறம்பட செயல்பட்டனர். அதன்படி, இந்த தொடரில் விக்கெட் வேட்டை...
தோனி என்ற ஒரு நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் ஏற்படவில்லை எனில் தினேஷ் கார்த்திக் என்ற ஒரு நுண் திறன் படைத்த வீரர், தலைமைத்துவத்திற்கான அருமையான மூளை கொண்டவர், எத்தனைப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கும் போது தினேஷ் கார்த்திக்கை நினைத்து வருந்தாமல் இருக்க முடியாது.
ஐபிஎல் 2024 சீசனில் ஆர்சிபி வெளியேறியது. தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 326 ரன்களை 187.35 என்ற ஸ்ட்ரைக்...
நேற்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்த பிறகு அந்த அணியை ட்ரோல் செய்யும் மீம்கள் சமூக வலைதளங்களை சுனாமி போல ஆக்கிரமித்துள்ளன
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி பிளே ஆஃப்...
நாளை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தன்னால் மறக்க முடியாத அஸ்வினின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் இந்திய வீரர் புஜாரா.
தரம்சாலா போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைக்க உள்ளார். அண்மையில் 500 விக்கெட்...
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்குகின்றனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நாளை (7-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டியானது இந்திய...










