பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள மலேசியாவின் ஓங் இயூ சின், தியோ யீ ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சாட்விக்-ஷிராக் ஜோடி21-13, 24-22 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் 47 நிமிடங்கள் நடைபெற்றது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், ட்ரிசா ஜாலி ஜோடி சகநாட்டைச் சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் ட்ரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.