இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் தகுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர்ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், வைல்டு கார்டு வீரரான அமெரிக்காவின் ஸ்டீபன் டோஸ்தானிக்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் சுமித் நாகல் 10 தரவரிசை புள்ளிகளையும் 14,400 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையையும் கைப்பற்றுவதை உறுதி செய்தார். 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சுமித் நாகல் தென் கொரியாவின் சியோங்-சான் ஹொங்குடன் மோதுகிறார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறுவார் சுமித் நாகல்.