ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஷோபா நீதிமன்றத்தில் மனு
admin - 0
பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜகசார்பில் போட்டியிட்டார். அவர் பேசும்போது, பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தைக்...
தமிழக அரசுப்பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நேற்று அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியுடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, சர்வதேச மற்றும்தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பில்...
சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விளம்பரப் பலகைகளை நிறுவுவது விதிமீறலாகும்.
எனவே, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. இதுவரை 460-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அதில் 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, மாநகராட்சியின் விளம்பரப்...
அரசியல் லாபத்துக்காக ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் கட்சிகள் கூட்டத்தில் விஜய்: தமிழக பாஜக விமர்சனம்
admin - 0
இந்த கூட்டத்தொடரில் முதல்வர்ஸ்டாலின், சில முக்கிய அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிட்டார்.
அந்த வகையில், ‘முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9,324.49 கோடியில் 16,596 கி.மீ. நீளமுள்ள சாலைகள், 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கதிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும்’ என்று ஜூன் 24-ம் தேதி அறிவித்தார்.
‘வரும்...
பள்ளி, கல்லூரியில் நுழைவு தேர்வு நடத்த கூடாது: முதல்வரிடம் நீதிபதி முருகேசன் குழு அளித்த அறிக்கையில் பரிந்துரை
admin - 0
மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்வது, ஆசிரியர் நியமன விதிகளை கடுமையாக்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது....
தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 99 சதவீத காவல் நிலையங்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்தில் உள்ளன என்றும், அவற்றின் பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் அத்துமீறல்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பதிவுகளை பத்திரப்படுத்த தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும். இது தொடர்பான...
தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி தவிர மற்ற பகுதிகளில் நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக்கட்டணத்தை குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்ற தமிழக அரசு, வழிகாட்டி மதிப்பில் திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு குழுவை அமைத்தது. இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் செய்ய கால அவகாசம்...
தமிழக அரசின் விண்வெளி வரைவு கொள்கை வெளியீடு: மதுரை, தூத்துக்குடி, நெல்லை வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
admin - 0
சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், தமிழக அரசின் விண்வெளி வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விண்வெளிக் கொள்கை வெளியிடப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 27-ம் தேதி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, தற்போது தொழில்துறை சார்பில், பொதுமக்கள், துறைசார்ந்த நிபுணர்கள் கருத்துகளை கோரும் விதமாக, தமிழ்நாடு விண்வெளி தொழில் வரைவுக் கொள்கை வெளியிடபட்டுள்ளது.
இந்த தொழில் கொள்கையைப் பொறுத்தவரை, புத்தாக்கம்,...
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் 14,627 பட்டதாரிகள் தேர்ச்சி; தமிழகத்தில் 650 பேர் தேர்வு
admin - 0
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
அதன்படி...
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்
admin - 0
தொழில் முதலீடுகள் தொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் பிரதமரின் மனதின் குரல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருகிலேயே பெங்களூரு விமான நிலையம் அமைந்திருக்கும் நிலையில் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது சாத்தியமா என்பது...










