தமிழக அரசுப்பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நேற்று அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியுடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, சர்வதேச மற்றும்தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பணி வழங்கப்படும் என்று சட்ட பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.