அரசியல் லாபத்துக்காக ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் கட்சிகள் கூட்டத்தில் விஜய்: தமிழக பாஜக விமர்சனம்

0
129

இந்த கூட்டத்தொடரில் முதல்வர்ஸ்டாலின், சில முக்கிய அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிட்டார்.

அந்த வகையில், ‘முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9,324.49 கோடியில் 16,596 கி.மீ. நீளமுள்ள சாலைகள், 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கதிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும்’ என்று ஜூன் 24-ம் தேதி அறிவித்தார்.

‘வரும் 2026 ஜனவரிக்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, டிஎன்பிஎஸ்சி மூலம் 17,595 பணியிடங்கள், டிஆர்பி மூலம் 19,260 ஆசிரியர்கள், எம்ஆர்பி மூலம் 3,041 மருத்துவ பணியிடங்கள், சீருடை பணியாளர்தேர்வாணையம் மூலம் 6,688 பணியிடங்கள் என 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுதவிர, சமூகநலம், நகராட்சி நிர்வாகம், குடிநீர்வழங்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக உள்ள 30,219 பணியிடங்கள் நிரப்பப்படும். ஒட்டுமொத்தமாக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்’ என 25-ம் தேதி அறிவித்தார்.

`ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என 27-ம் தேதி அறிவித்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தமிழகத்தில் 1,93,891 அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 28,643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும். முதல்கட்டமாக, இந்த ஆண்டில் சென்னையில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப் பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர், திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப் பகுதி ஆகியவற்றில் உள்ள6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம்மற்றும் புதிய திட்டப் பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும் என 28-ம் தேதி அறிவித்தார்.

மொத்தத்தில், 110 விதியின்கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும், இளைஞர்களின் அரசுவேலைவாய்ப்புக்கும் முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரவேற்கும் நீட் தேர்வை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கும் கட்சிகளின் கூட்டத்தில் விஜய் சேர்ந்திருக்கிறார் என தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை:

மருத்துவம் படிக்க முன்வரும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து அதை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு. இவ்வாறு நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே நீட்டை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும், அதை விஜய் ஆதரிக்கிறேன் என்பதும் வேடிக்கையானது.

உயர்கல்வி மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் என்பதையும் அவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். என்சிஇஆர்டி-க்கென தனி பாடத்திட்டம் இல்லை. அந்த அமைப்பின் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றன.

நீட் தேர்வு வந்த பிறகு பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் எத்தனை பேர் ஆண்டுதோறும் மருத்துவ இடங்களை பெறுகிறார்கள் என்பதையும், முன்பு அப்பிரிவினர் எத்தனை பேர் இடங்களை பெற்றிருக்கிறார்கள் என்பதையும் விஜய் முதலில் தெரிந்து கொண்டால் மிக்க நல்லது.

எல்லோரும் அரசியலுக்காக பேசுவதை இவரும் பேசி இருக்கிறார் என்றே கருதுகிறேன். சமூக நீதியின்படி தமிழகத்தின் இட ஒதுக்கீடு கொள்கை போலவே 100 சதவீதம் நீட் தேர்விலும் மாணவர் சேர்க்கையின்போது கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே நீட் தேர்வுஎழுதுவதிலும் தமிழக மாணவர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் திட்டம் போட்டு தவறு செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். டிஎன்பிஎஸ்சி உட்பட தமிழகத்திலும் சில குளறுபடிகள் ஏற்பட்டன.அதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையும் குறை சொல்வது நியாயமாகாது?

அவர், ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லத் தொடங்கி இருப்பது கூட ஆச்சரியம் அளிக்கிறது. ‘நீட்’ குறித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் பேசுகின்றன. எனவே நாமும் பேசுவோம் என்பதைதான் அவர் பேச்சிலிருந்து உணர முடிகிறது. அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கும் கட்சிகள் கூட்டத்தில் விஜய்யும் இணைந்திருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here