பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.
2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி வந்தார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்வதால் இவருக்கு கர்கோஷ் (முயல்) என்ற புனைப் பெயர் உள்ளது. கடந்த...
ஏப்ரல் 23இல் முதல் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொண்டிருக்கும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் களம், அனலாகத் தகிக்கிறது. வழக்கமாகப் பல கட்டங்களாக நடத்தப்படும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல், இந்த முறை இரண்டே கட்டங்களாக நடத்தப்படுவது கவனம் ஈர்க்கிறது. ஆனால், வங்க மண்ணின் அரசியல் களத்துக்கே உரிய பரபரப்புக் காட்சிகளுக்கு இந்தத் தேர்தலும் விதிவிலக்கல்ல.
2011-லிருந்து முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறது...
குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் நடியாத் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஒரு சரக்கு வாகனத்தை மறித்து ஜிஎஸ்டி வரி ரசீதை ஆய்வு செய்துள்ளனர். அதில் குறைகள் இருப்பதாக கூறி சரக்கு வாகனத்தை ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அந்த சரக்கு வாகனத்தின் உரிமையாளர் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் அமர்நாத் கோவர்தன் ராம் சரோஜ், ஆய்வாளர்...
கடந்த 2021 ஏப்ரல் முதல் 2025 நவம்பர் வரை நாடு முழுவதும் டிஜிட்டல் கைது உட்பட சைபர் மோசடியால் பொதுமக்கள் ரூ.54,000 கோடியை இழந்துள்ளனர். இந்த மோசடியைத் தடுக்க சிபிஐ சார்பில் அபய் என்ற பெயரில் ‘சாட்பாட்' வசதி தொடங்கப்படவுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ‘சாட்பாட்' வசதியை தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: சிபிஐ அமைப்பின் சாட்பாட்...
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 வழங்கப்படும்: பிரதமர் மோடி பிரச்சாரம்
admin - 0
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தின் விஷ்ணுபூர், புருலியா, ஜார்கிராம், மிதினாபூர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்தின் போது, திமுக எம்.பி. கனிமொழி நேற்று பேசியதாவது: மகளிர் இடஒதுக்கீடுக்கு ஆதரவானவை போல வரும் 3 மசோதாக்களும், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் மீது தொடுக்கப்படும் மிகக் கடுமையான தாக்குதல்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அழைப்பை தென் மாநிலங்கள் ஏற்றன. அதனால் எங்கள் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்தது. இப்போது நாம்...
ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த மாவட்டத்தில் ராம்பில்லி, எடமஞ்சிலி, கோட்ட ஊரட்லா ஆகிய பகுதிகளில் நில நடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். ரிக்டர் அளவு 3.7 ஆக பதிவாகி உள்ளது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் பயந்து போய் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
நிலநடுக்கம் மீண்டும் ஏற்படும் என்ற பயத்தில்...
நாடாளுமன்ற மக்களவை தொகுதி எண்ணிக்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இது முதல் முறையல்ல. சுதந்திரத்துக்குப் பிறகு எம்.பி.க்களின் எண்ணிக்கை 5 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை நடைபெற்றது. அப்போது 489 மக்களவை இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்ப கால ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது. அடுத்து 1957-ல் நடைபெற்ற 2-வது பொதுத்...
மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் நடித்து, ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான அமலாக்கத் துறை வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா முன் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நடிகை ஜாக்குலின்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அருணா சின்சோல்கர் (64). இவரை கடந்த ஆண்டு நவம்பரில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள், தீவிரவாத தடுப்புப் படையிலிருந்து பேசுவதாக மிரட்டி அவரை டிஜிட்டல் கைது செய்தனர்.
பின்னர் மிரட்டி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.26.65 லட்சத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பின்னர், தான் ஏமாற்றப்பட்டது அருணாவுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர் போபால் சைபர்...










