இந்திய பெண் ராணுவ அதிகாரிக்கு ஐ.நா. விருது: பிரதமர் மோடி வாழ்த்து

0
24

ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா. அமைதிப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஐ.நா. அமைதிப்படை தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு ‘‘டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்’’ அறிவிக்கப்பட்டது. ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றும் இந்திய ராணுவ பெண் அதிகாரி மேஜர் அபிலாஷா பராக் லெபனானில் முகாமிட்டு உள்ளார்.

அங்கு பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றத்துக்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில், “மிலிட்டரி ஜென்டர் அட்வ கேட் ஆப் தி இயர்’’ விருது அபிலாஷா பராக்குக்கு அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் விருதுகளை வழங்கினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘மேஜர் அபிலாஷா பராக்கை வாழ்த்துகிறேன்.

இந்த கவுரவம், அவரது முன்மாதிரியான சேவைக்கும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் முயற்சிகளுக்கு இந்தியா நீண்ட காலமாக ஆற்றிவரும் பங்களிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும். அவரது இந்தச் சாதனை, எண்ணற்ற இந்தியர்களுக்கும், குறிப்பாக நமது மகள்களுக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here