மக்களவையில் உண்மையான ‘டிஎம்சி’ என உரிமை கோர சபாநாயகரை சந்திக்கும் அதிருப்தி எம்.பி.க்கள்

0
18

மக்​களவை​யில் தங்​களை ‘உண்​மை​யான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்​சி) குழு​வாக அங்​கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க அக்கட்சியின் அதிருப்தி எம்​.பி.க்​கள் மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லாவை சந்​திக்​கத் தயா​ராகி வரு​கின்​றனர்.

மேற்கு வங்​கத்​தில் அண்​மை​யில் நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்​று, முதல்​முறை​யாக ஆட்​சியை கைப்​பற்​றியது. திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்கு (டிஎம்​சி) 80 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்த தோல்விக்கு பிறகு அக்​கட்​சி​யில் உட்​கட்சி பூசல் அதி​கரித்து தொடர்ந்து பிளவு ஏற்​பட்டு வரு​கிறது.

சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் நியமனத்​தில் மம்​தா​வின் முடிவுக்கு எதி​ராக 58 எம்​எல்​ஏக்​கள் போர்க்​கொடி தூக்​கினர். அவர்​கள் தனி அணி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இது​போல் டிஎம்சி மக்களவை எம்​.பி.க்​கள் 29 பேரில் 20 பேர் தனி அணி​யாகப் பிரிந்​தனர். இவர்​கள் பாஜக கூட்​ட​ணிக்கு தங்​கள் ஆதரவை தெரி​வித்​துள்​ளனர்.

இது​வரை 3 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு கட்​சியை விட்டு வில​கி​யுள்​ளனர். இந்​நிலை​யில் டிஎம்சி அதிருப்தி எம்​.பி.க்​களில் ஒரு​வ​ரான ஜெகதீஷ் சந்​திர பர்மா பாசுனியா நேற்று கூறுகை​யில், “நாங்​கள் ஏற்​கெனவே மக்​களவை சபா​நாயகரிடம் கடிதம் அளித்​துள்​ளோம். வரும் திங்​கள்​கிழமை சபா​நாயகரை மீண்​டும் சந்​திக்க உள்​ளோம்.

அப்​போது உண்​மை​யான டிஎம்சி நாடாளு​மன்​றக் குழு​வாக நாங்​கள் உரிமை கோரு​வோம். எங்​கள் கோரிக்​கைக்கு அங்​கீ​காரம் வழங்​கு​மாறு சபா​நாயகரிடம் கேட்​போம்” என்​றார்.

கூச் பெஹார் தொகுதி எம்​.பி.​யான பாசுனியா தங்​கள் கடிதத்​தில் 19 எம்​.பி.க்​கள் கையெழுத்​திட்​டுள்​ள​தாக கூறி​னார். என்​றாலும் சபா​நாயகருட​னான இந்த சந்​திப்​புக்கு இது​வரை நேரம் இறுதி செய்​யப்​பட​வில்லை என்று மக்​களவை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இதற்​கிடை​யில், ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் பாஜக தங்​களை கட்சி மாறச் செய்ய முயற்​சிப்​ப​தாக டிஎம்​சி-​யின் கீர்த்தி ஆசாத் எம்​.பி. குற்​றம் சாட்​டி​னார்.

“டிஎம்​சி.யை பலவீனப்​படுத்த திட்​ட​மிட்ட சதி நடக்​கிறது. டிஎம்சி மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் ராஜி​னா​மா, மக்​களவை அதிருப்தி எம்​.பி.க்​கள் – பாஜக தலை​வர்​கள் இடையி​லான சந்​திப்​பு​கள் இதற்​கான சான்​றுகள்​” என்​று அவர்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here