கீழ்குளம்: வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசகுளம் வாய்க்கால் உடைப்பால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் தண்ணீர் நிரம்பி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்த பகுதியை பேரூராட்சி சார்பில் நேற்று (7-ம் தேதி) மணல் மூட்டை அடுக்கி அந்த உடைப்பை சரிசெய்தும் பணியினை கீழ்குளம் பேரூராட்சி...
குழித்துறை: பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை
நித்திரவிளை அருகே ஆலங்கோடு, பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திர விக்னேஷ் (37) இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விஜயகுமாரி (54). இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்திர விக்னேஷ் விஜயகுமாரியின் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்....
நாகர்கோவில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்ஐசி அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர்கள் நேற்று(நவம்பர் 6) ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், "எல்ஐசி பாலிசிதாரர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும்; உயர்த்தப்பட்ட எல்ஐசி பாலிசிக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும்; குறைந்த காப்பீடு தொகையை இரண்டு லட்சமாக உயர்த்தியதை குறைத்திட வேண்டும்; எல்ஐசி...
குமரியில் சட்டமன்ற பேரவை குழு ஆய்வுக் கூட்டம்
குமரி மாவட்டத்திற்கு தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு அதன் தலைவர் காந்தி ராஜன் எம். எல். ஏ தலைமையில் நேற்று(நவம்பர் 6) வந்தது. குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த குழு பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது 8 லட்சம்...
கன்னியாகுமரி: சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் மனுக்கள் கொடுத்த பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் எம். எல். ஏ. தலைமையில் அதிகாரிகளுடன் நேற்று (நவம்பர் 6) ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகள் அடங்கிய மனுக்களை சட்டமன்ற குழு தலைவர்...
இரணியல்: வீட்டில் நகை, குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது
வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டில் வைத்திருந்த பித்தளை குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கடந்த 18ஆம் தேதி திடீரென காணவில்லை. இதைக் குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நேற்று (நவம்பர் 6) இரணியல் போலீசார் மணக்கரை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது...
பத்மநாபபுரம்: வரிப்பணம் சுருட்டல்.. பெண் காசாளர் பணியிடை நீக்கம்
பத்மநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில் நகராட்சி மக்கள் பல்வேறு வகை கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கணினி மூலம் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக வசூல் ஆகும் தொகையை அலுவலகத்தில் செலுத்துவதில் குளறுபடி இருந்தது....
இரணியல்: வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகை மாயம்
இரணியல் அருகே காற்றாடி மூடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (55). நாகர்கோவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குருந்தன்கோடு பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினரின் மகள் கோட்டாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு...
வள்ளவிளை: 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை அந்தோணியார் குருசடி பகுதியில் ஒரு சொகுசு வேனில் சுமார் 2 ஆயிரம் லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் உடன் நிற்பதாக கொல்லங்கோடு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த இடத்திற்கு கொல்லங்கோடு எஸ்.ஐ வில்சன் தலைமையான போலீசார் நேற்று (நவம்பர்...
ஒழுகினசேரியில் நகர் நல மையத்தை திறக்க மக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ. 60 லட்சம் செலவில் நகர் நல சுகாதார மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் கட்டிய நிலையிலேயே மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்டடத்தை திறந்து நகர் நல மையத்தை செயல்பட...












