வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட்ராஜ் (68). டெம்போ டிரைவர். இவரது மனைவி சுமதி (66). சம்பவத்தன்று சுமதி ராஜாவூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஆல்பர்ட்ராஜ்க்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் மது உடன் எறும்பு பொடியை கலந்து குடித்ததாக தெரிகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் சுமதிக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆல்பர்ட்ராஜ் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆல்பர்ட்ராஜ் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து சுமதி இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.