குமரி மாவட்டத்தில் நான்கு சப் டிவிஷன்கள் உள்ளன. இதில் நான்கு மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது ஐந்தாவதாக மீண்டும் மார்த்தாண்டத்தை தலைமையாகக் கொண்டு சப் டிவிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால் மகளிர் போலீஸ் நிலையம் அதிகரிக்கப்படவில்லை.
தக்கலை பகுதிக்கும் மகளிர் காவல் நிலையம் மார்த்தாண்டத்தில் அமைந்துள்ளது. தற்போது பொதுவாக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள், பெண்கள் மீதான குடும்ப வன்முறை, பாலியல் பிரச்சனைகள், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட வழக்குகள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பதிவாகிறது.
எனவே தக்கலை காவல் சப் டிவிஷனில் உள்ள தக்கலை, கொற்றிக்கோடு, திருவட்டார், குலசேகரம், பேச்சிபாறை ஆகிய காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பெண்கள் மீதான வழக்குகளுக்கு தக்கலையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என மகளிர் சமூக இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.