கிள்ளியூர்:  திருட வந்ததாக வாலிபரை கட்டி வைத்த பொதுமக்கள்

0
44

கிள்ளியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 25 வயது வாலிபர் ஒருவர் திருட வந்த போது பிடித்து கட்டி வைத்திருப்பதாக கருங்கல் போலீசருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, அவர் திருட வரவில்லை என கூறினார். பின்னர் கட்டி வைத்திருந்த வாலிபரை மீட்ட போலீசார் அவரிடம் கடுமையான விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள சுமார் 22 வயதுள்ள திருமணமான பெண்ணை பார்ப்பதற்கு வந்ததாக கூறியுள்ளார். 

போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அந்த பெண் தனக்கு தெரியாது எனவும், அந்த வாலிபர் திருட வந்ததாக கூறியுள்ளார். உடனடியாக போலீசார் அந்த வாலிபரின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அந்த இளம் பெண்ணும் வாலிபரும் நெருக்கமாக சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் இருப்பதைக் கண்டனர். வாலிபருக்கும் அந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருப்பது அறிந்த போலீசார், வாலிபரிடம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பினார். மேலும் அந்த பெண் தான் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், இது போல் இனி நடக்காது எனக் கூறி அழுததை அடுத்து அவரையும் எச்சரித்து அனுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here