நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியில் 1998 ஆண்டு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. அப்போது சமத்துவபுரம் வளாகத்தில் நீரூற்றுடன் கூடிய குழந்தைகள் பூங்கா மற்றும் தொலைக்காட்சி பெட்டி அன்று இருந்தது. அதன்பிறகு ஆட்சி மாறிய போது பூங்கா பராமரிப்பு இல்லாமல் அனைத்தும் நாசமாகிவிட்டது,
பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த தொடங்கினர். இது சம்பந்தமாக சமத்துவபுரம் பகுதியில் வாழும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்களை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமத்துவபுரம் மறுசீரமைப்பு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த ஊழியர்கள், வருவாய் துறையினர் மூலம் நிலத்தை அளந்து, பொதுப்பணித்துறை மூலம் குழந்தைகள் பூங்கா புதிதாக அமைத்து வருகின்றனர். இது சமத்துவபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.