Google search engine

குமரி: பொதுமக்களிடம் நேரில் மனு வாங்கிய குமரி எஸ்.பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி...

தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு வந்த 1, 350 டன் ரேஷன் அரிசி

குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தஞ்சாவூரில் இருந்து 1, 350 டன் ரேஷன் அரிசி மூடைகள் ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில்...

களியக்காவிளை: 20 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது

குமரி மாவட்டம்  வழியாக வட மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்லும்  சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாறசாலை...

மார்த்தாண்டம்: கடைக்குள் போதையில் மயங்கிய நகை தொழிலாளி

குழித்துறையை சேர்ந்தவர் தேசிங்குராஜா (55) இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். தேசிங்குராஜா மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் தனியார் காம்ப்ளக்ஸ்  முதல் மாடியில் நகை பட்டறை வைத்துள்ளார். பணி அதிகமாக இருக்கும் போது இரவு வேளையில் இந்த கடையில் தேசிங்குராஜா தூங்குவது வழக்கம். அப்போது தனது மனைவிக்கு...

கொல்லங்கோடு: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பெருமளவு லஞ்சம் புரண்டோடுகிறது. குறிப்பாக அனுமதி இல்லாத சொத்துக்களை பதிவு செய்வதும் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மீண்டும் ஆவணங்களை விடுவிப்பது அதற்காக பல ஆயிரங்கள் முதல் லட்சங்களில் லஞ்சம் பெறுவது தொடர்ந்து நடைபெறுகிறது.         இந்நிலையில்...

கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேச்சு போட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் நிதி மூலமாக கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகள் நேற்று நடந்தன. போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் பிரகாசி அருள்ஜோதி தலைமை தாங்கினார். பேராசிரியை...

பளுகல்: கேரள நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

குமரி மாவட்டம்,  பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்ட மணிவிளையில் நூற்றாண்டு பழமையான அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியை ஒட்டிய கேரள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் அரசு பள்ளி நிலத்தையும், தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு  சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து...

குமரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 24 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3, 719 பேர் அடையாள அட்டை இல்லாமல் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தனித்த தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த முகாம் வரும்...

புதுக்கடை: வீடு புகுந்து மின் சாதனங்கள் திருட்டு; ஒருவர் கைது

புதுக்கடை அருகே கிள்ளியூர், பருத்தித்காட்டு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெர்சன் மனைவி பெமி (36). ஜெர்சன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஊரில் புதிய வீட்டு வேலை நடந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் புதிய வீட்டில் வைத்திருந்த மின் வயர்கள் மற்றும்...

தக்கலை: 1. 5 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

தக்கலை மதுவிலக்கு போலீசார் தோட்டியோடு, நுள்ளிவிளைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி, அவரை சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட அரை கிலோ கஞ்சா பாக்கெட் இருந்தது தெரிய வந்தது....