களியக்காவிளை: 20 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது

0
431

குமரி மாவட்டம்  வழியாக வட மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்லும்  சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாறசாலை ரயில் நிலையத்தில் ரயிலில் சந்தேகமான முறையில் அமர்ந்திருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் சோதனை செய்தபோது பண்டல் பண்டலாக சுமார் 20 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

போலீசார் நான்குவரையும் பிடித்து விசாரணை நடத்தி அதில் இரண்டு பேர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த விக்ரம் குமார் ( 22), மனோஜ் ரஞ்சன் குறா (20), கேரள மாநிலம் திருவனந்தபுரம் சேர்ந்த சந்திரன், கொல்லம் பகுதியை சேர்ந்த சிபு என்பது தெரிய வந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் நாகர்கோவில் வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் கொண்டு செல்லும்போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here